ஆந்திராவின் கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் காரணமாக பல்லாயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ளன. மேலும் பல கோழிகளுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இதனால் அங்கிருந்து முட்டை, கறிக்கோழிகளை வெளியே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி மற்றும் முட்டைகளை சரியாக சமைக்காமல் சாப்பிடக்கூடாது என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கோழிகள் கொண்டு வருவதை தடுக்க ஆந்திர எல்லையில், தெலங்கானா அரசு சோதனை சாவடிகளை அமைத்துள்ளது.