கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. இன்னும் 3 அடிகளே எஞ்சியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளில் இருந்து வினாடிக்கு 18000 கனஅடி நீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர மக்கள் கவனமாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.