சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் திடீரென தீ பற்றியதை அரிந்த ஓட்டுநர் அங்கிருந்த தப்பிக்க, இருசக்கர வாகனம் முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனையறிந்த போக்குவரது காவலர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.