டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக முதல் பத்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே தழுவாத நபர் என்ற சாதனையை பவுமா படைத்துள்ளார். அவர் இதுவரை 10 போட்களில் 9 வெற்றி, 1 டிரா என வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். முன்னதாக 1926-ல் இங்கிலாந்து கேப்டன் பெர்சி சாம்ப்மேன், தனது முதல் 10 போட்டிகளில் 9 வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.