வேலூர் மாவட்டத்தில் வேலப்பாடி என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது பகவதி மலை. கிட்டத்தட்ட 1100 அடி உயரத்தில் ஏறிச் சென்றால்தான் இந்த மலையின் உச்சியை அடைய முடியும். இந்த மலைக்குள் கல்வெட்டுகள், சிவலிங்கம், சித்தர் பீடங்கள், நந்தி சிலை, சமணர் பாதங்கள் உள்ளிட்ட பல வரலாற்று ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. மேலும் மிகக் குறுகலான குகைக்குள் இறங்கிச் சென்றால் உள்ளே பகவதி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.