கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள நடிகர் பகத் பாசில் மற்றும் அவரது மனைவி நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். முன்னதாக, நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்த நிலச்சரிவில் சிக்கி 270க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.