பாய் வகைகளில் ஈச்சம் பாய், கோரைப்பாய், மூங்கில் பாய் என பலவகை உண்டு. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் கோரைப்பாய்க்கு உடல் சூட்டை உள்வாங்கும் தன்மை உள்ளதால், ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும். உடல் சோர்வாக உணர்பவர்கள் பாயில் படுத்து எழுந்தால் சோர்வு நீங்கும் என கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்கினால் அவர்களுக்கு முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்னைகள் வராது.