கொய்யா இலைகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் நிறைய இருக்கிறது. கொய்யா இலைகளை தினமும் சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. சர்க்கரை நோய் கட்டுக்குள் வருகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. ரத்தநாளங்களில் அதிக கொழுப்புகளை படியவிடாமல் தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுத்து கேன்சரில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.