திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் பிரசித்திப் பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், பீட்ரூட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.