உலகில் இன்றியமையாத வண்டு இனங்களில் ஒன்றான தேனீ தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றுகிறது. தேனீக்கள் இல்லாத பட்சத்தில் உணவுப்பயிர்கள் மற்றும் தாவரங்கள் அழியும் நிலை உண்டாகும். பூவில் உள்ள மகரந்தத்தை வேறொரு பூவுக்கு தேனை சேகரிப்பதால் மாற்றி மகரந்த சேர்க்கைக்கு தேனீ வழிவகுக்கிறது. இதுவே தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது. தேனீக்களின் மகரந்த சேர்க்கையால் மட்டுமே உலகில் 3ல் 1 பங்கு உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.