வடமாநிலங்களில் இருந்து இங்கு வட்டி தொழில் செய்யவரும் சேட்டுகள் பெண்களுக்கு கடன் கொடுக்கின்றனர். பின்னர் அந்த பெண்கள் வட்டி தொகை கொடுக்க தாமதப்படுத்தினால் வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும், அவ்வாறு செய்தால் வட்டி தொகையை குறைப்பதாக கூறுகின்றனர். இதனால் பெண்கள் நிர்வாண வீடியோ கால் செய்கின்றனர். இதனை ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்து அந்த சேட்டுகள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். இந்த சம்பவத்தில் கேரளா மாநில காங்கிரஸ் நிர்வாகி பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலும் இந்த மோசடி நடந்து வருகிறது.