பண்ணாரி அம்மன் கோயில் பூச்சாட்டுதல் விழா

58பார்த்தது
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் வரும் ஏப்ரல் 08 ஆம் தேதி அதிகாலை நடக்க உள்ள குண்டம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச் 25) பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தெப்பக்குளத்தில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு, பண்ணாரி அம்மன் மற்றும் மாதேஸ்வரன் சாமிக்கு பூஜைகள் செய்து அம்மனிடம் வரம் கேட்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி