கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் சமாதியில் எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்கிற்கு தடை நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, "இச்சடங்கு ஒரு வழிபாடு. அனைத்து சாதியினரும் எச்சில் இலையில் உருளுகின்றனர்" என்று நெரூர் மடம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் அதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.