பர்மிங்காமில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் லக்சயா சென் - ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேசியா) ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே நன்றாக ஆடிவந்த லக்சயா சென் 21-13, 21-10 என்ற நேர்செட்டில் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தினர். இதன் மூலம் அவர் கால்இறுதிக்கு தகுதிப் பெற்றார். கிறிஸ்டிக்கு எதிராக 7ஆவது முறையாக மோதிய லக்சயா சென், அதில் 3ஆவது வெற்றியை பெற்றுள்ளார்.