சேலத்தில் ரூ.1.20 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு

60பார்த்தது
சேலத்தில் ரூ.1.20 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு
சேலம் மாவட்டத்தில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனை அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், விற்க முயன்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு பிறந்த குழந்தையை விற்றது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ரமேஷ், அவரது மனைவி, குழந்தையை வாங்கிய ராஜா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். ரூ.3 லட்சம் விலை பேசி ரூ.1.20 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி