பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால் தான். இது தான் குழந்தையின் முதல் உணவாக இருக்கிறது. தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், அனைத்து வகையான புரதமும் அடங்கியுள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ஆம் தேதியும், ஆகஸ்ட் 7 வரை தாய்ப்பால் வாரமும் கடைபிடிக்கப்படுகிறது.