ஐசிசி சேர்மன் ஜெய் ஷா இன்று (ஜூன் 10) ICC Hall of Fame விருதுகளை அறிவித்தார். அதன்படி, கிரிக்கெட்டர் MS தோனிக்கு 2025ம் ஆண்டுக்கான Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்நிலையில், தோனிக்கு விருது வழங்கப்படுவது தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது X பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்திய கிரிக்கெட் வரலாற்றின் அத்தியாயத்தில் தோனியின் அமைதி, அதிரடி செயல்கள் எப்போதும் இடம்பெறும்" என தெரிவித்துள்ளார்.