இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியை வெல்ல 340 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி பயணித்த இந்தியா இன்று (டிச. 30) ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.