பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை சீண்டிய இந்திய வீரர் விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், விராட் கோலி 36 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது ஆஸி., ரசிகர்கள் அவரை கலாய்த்தனர். இதனால், கோபமடைந்த கோலி திரும்பி வந்து ரசிகர்களை பார்த்து முறைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.