தமிழ்நாட்டில் நாளை (ஜன.25) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் பெற முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்றும் வழங்கப்பட உள்ளது.