கறிவேப்பிலை சமையலில் பிரதானமாக பயன்படுத்தும் பொருளாக உள்ளது. கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். கறிவேப்பிலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை இலகுவாக்கும் மற்றும் விரைவாக வளர்சிதை மாற்றமடையாது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாவுச்சத்து முதல் குளுக்கோஸ் முறிவு விகிதத்தை குறைக்க கறிவேப்பிலை உதவும்.