வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

96702பார்த்தது
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனியாக இருப்பதை நோட்டமிட்டு அங்கு சென்றார். பின்னர் அவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல் போட்டவுடன் அந்த குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஜெயபிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி