ராணிப்பேட்டையில் பாமகவினர் இருவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் ஈடுபட்டவர்கள் விசிக-வினர் என பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குற்றஞ்சாட்டினர். இது குறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ராணிப்பேட்டை சம்பவத்திற்கும் விசிகவிற்கும் தொடர்பு இல்லை, ராமதாஸ், அன்புமணி வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.