அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் மீது தாக்குதல் (வீடியோ)

682பார்த்தது
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் திங்கள்கிழமை பிற்பகல் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சீன தூதரகத்தின் மீது ஒருவர் காரை மோதியுள்ளார். கட்டிடத்திற்குள் அவர் காரை ஓட்டிவந்துள்ளார். அவர் கையில் ஆயுதம் வைத்திருந்ததால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடினர். இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் சுட்டதில் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு தூதரகத்தில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி