உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. திங்களன்று கியேவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ஏவுகணை ஒன்று தாக்கியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டனர். 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு நகரங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகின. தாக்குதலின் போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேட்டோ உச்சி மாநாட்டிற்காக வாஷிங்டனுக்குச் சென்றிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.