மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் மெய்தி சமூகத்தினருக்கும், குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத சிலர் அந்த இளைஞரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவரை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்ற நாளில் இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.