மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் சோதனை அடிப்படையில் ஏடிஏம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. மகாராஷ்டிரா வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏடிஎம், தினசரி விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்-ல் இருந்து விரைவில் பயணிகள் பணம் எடுக்கலாம். ரயில் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் உள்ள போதிலும், ஓடும் ரயிலில் ஏடிஎம் நிறுவப்பட்டது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் பயணிகள் தங்கள் நேரத்தை சேமிக்க முடியும். அவசர தேவைக்காக இனி ரயிலிலேயே பணம் எடுக்கலாம்.