தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொகுதிக்கு 3 அதிகாரிகள் வீதம் 700-க்கும் மேற்பட்ட உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம். இது குறித்த விபரங்களை, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசிதழில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.