திருப்பத்தூர்: பாலாற்றில் குவித்து வைத்திருந்த மணலை, மணல் கொள்ளையர்களும், ஒப்பந்ததாரர்களும் கூட்டு சேர்ந்து இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. ஆனால், அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்காததை அடுத்தும், உதவி ஆய்வாளர் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.