தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில், விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ் தவெகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை வகுப்பு மற்றும் பிரச்சார பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூர் அலுவலகத்தில் இன்று நடந்து வரும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அருண்ராஜ் இணைந்தார். தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜலெட்சுமியும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.