எம்ஜிஆரை நடிகராக, தலைவராக மட்டுமின்றி ஓர் கடவுளாக பாவித்தனர் அந்த காலத்து மக்கள் என கூறினால் அது மிகையாகாது..! அதை நிரூபிப்பதுபோல் சென்னையை அடுத்த ஆவடியின் நத்தமேடு பகுதியில் எம்ஜிஆருக்கு அருள்மிகு எம்ஜிஆர் ஆலயம் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலை அவரின் தீவிர ரசிகரான கலைவாணன் கட்டியுள்ளார். பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் மற்றும் கதம்ப பொடி போன்றவற்றை கொண்டு இங்கு 7 பூஜைகள் செய்யப்படுகின்றன.