கலை பண்பாட்டுத் துறை, சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் "சென்னையில் ஓவியச் சந்தை" சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் 03.08.2024 முதல் 05.08.2024 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தைச் சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகள் விற்பனைக்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.