உ.பி: ஜான்சி ரயில் நிலையத்தில், வலியால் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு நடை மேடையிலேயே ராணுவ மேஜர் ரோகித் பச்ச்வாலா மகப்பேறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ அறை இல்லாததால், ஹேர் கிளிப் மற்றும் சிறிய பாக்கெட் கத்தியை பயன்படுத்தி குழந்தையை பெற்றெடுக்க அவர் உதவியுள்ளர். இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தாய்–குழந்தை இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், தற்போது இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.