பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள மூவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.