இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். போப் லியோ, புதிய போப்பாக பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே.11) பொதுமக்கள் முன் தோன்றி உரையாற்றினார். அப்போது அவர், 3-ம் உலக போருக்கு ஈடாக நாடுகள் மோதி கொள்ளும் சம்பவங்களை கடிந்து கொண்டார். மேலும், பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.