நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி மனு
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் நிலையில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நாளை (நவ. 12) விசாரணைக்கு வருகிறது.