ஜீயபுரம்: குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மணிகண்டன் நேற்று (நவம்பர் 17) வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி ராஜேஸ்வரி அளித்த தகவலின் பேரில் மணிகண்டனின் உடலை மீட்ட ஜீயபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.