திருச்சி: மர்ம கும்பல் கடையில் கொள்ளை

69பார்த்தது
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (48) இவர் காட்டூர் சக்தி நகரில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் 3 பேர் அடங்கிய மர்ம நபர்கள் கடையில் கொள்ளை அடிப்பதற்கு வந்துள்ளனர். 

அதில் ஒருவன் கடை பூட்டை உடைத்து உள்ளே வந்தான். அப்போது எதிர்திசையில் இருந்தவர்கள் இதை யாரோ பார்த்து உடனடியாக ஸ்டுடியோவின் உரிமையாளர் ஆல்பர்ட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆல்பர்ட் திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீஸ் வருவதற்குள் போட்டோ ஸ்டுடியோவின் கதவின் பூட்டை உடைத்து சட்டரை திறந்து ஸ்டுடியோவில் இருந்த கேமரா, ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 4 பெண் டிரைவ்களை எடுத்துக்கொண்டு உடைத்த கண்ணாடி கதவு வழியாக தப்பினர். 

அதில் தப்பிக்க முயற்சித்த போது ஒரு திருடனின் காலில் கண்ணாடி கிழித்து ரத்தம் வெளியேறி அப்பகுதியில் பரவி கிடந்துள்ளது. இந்நிலையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 3 பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்று விட்டனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி