அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்தில் கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் எள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கவலையில் மூழ்கினர். இதையடுத்து வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்காலிக வடிகால் ஏற்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.