பெரம்பலூர் நகராட்ச்சிக்குட்பட்ட துறைமங்கலத்தைசேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட அ. தி. மு. க. செயலாளர் ஆவார். இவ ருடைய மகன் வீனிஸ் பிரசன்னாவிற்கு பெரம்பலூர்- அரிய லூர் சாலையில் சொந்தமாக வயல் உள்ளது. அந்த வயலில் தற்போது 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட் டுள்ளது. அந்த கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதி அதிகாலையில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.