பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து கவிழ்ந்து விபத்து, சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள், போலீசார் விசாரணை.
அக்டோபர் 6ம் தேதி இரவு நாகர்கோவிலில் தனியார் ஆமினி பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருநெல்வேலி மாவட்டம், ஒதியத்தூர் தெற்கு தெருவை பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் காந்தி 42 என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, அக்டோபர் 7ம் தேதி அதிகாலையில் பெரம்பலூர் அருகே கங்கா கிரஷர் உள்ள பகுதியில் பேருந்து வந்து கொண்டிருக்கும் போது, தீடீர் என ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 30 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். பயணிகள் அனைவரும், எந்தவித பெரிய பாதிப்பும் இன்றி அவ்வழியாக சென்ற மற்ற பேருந்துகளில் ஏறி சென்றுள்ளனர் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை, பயணிகள் யாரும் மருத்துவமனைக்கும், செல்லவில்லை, இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.