பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச வழக்கில் கைதாகி துணை வட்டாட்சியர் பழனியப்பன். மருத்துவமனையிலிருந்த அவர் தப்பியோடி தலைமறைவானார். இந்த நிலையில் வட்டாட்சியர் பழனியப்பனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.