பெரம்பலூர்: அதிகாலையில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம்!

2007பார்த்தது
பெரம்பலூர்: அதிகாலையில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம்!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெருநிலா கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் வரதராஜ், என்பவர் மனைவி கல்பனா, வயது 23. இவர்களுக்கு, முதல் பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக கல்பனா கர்ப்பமாகி பசும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஜுன். 7ம் தேதி அதிகாலை 3 மணி அளவில், கல்பனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே கல்பனாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 108 அவசர கால மருத்துவர் நுட்புணர். தேவபாலன்
108 ஓட்டுனர் ராஜேந்திரன் ஆகியோர் தேவையான முதல் உதவி செய்து, பசும்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்ட தாயும் செய்யும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸில் முதலுதவி செய்து பிரசவம் பார்த்த
அவசர கால மருத்துவர் நுட்புணர். தேவபாலன்
மற்றும்
ஓட்டுநர் ராஜேந்திரன்
ஆகியோர்களுக்கு கல்பனா, வரதராஜன் தம்பதிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி