வீடியோ காலில் குழந்தையை கொடுமை செய்தவர் கைது

4720பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலஉசேன்நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்தோஷ் குமார் வயது. 33 இவருக்கும் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா வயது 25, என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராதிகாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் ராதிகா கோபித்துக் கொண்டு சென்னையில் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தைகளை ராதிகாவுடன் அனுப்ப மறுத்ததால் சந்தோஷ்குமாரிடம் விட்டு விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், ராதிகாவிடம் வீடியோ கால் மூலமாக பேசிய சந்தோஷ்குமார், நீ வர மறுப்பதால், இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து விடுவேன் என்றும், சித்திரவதை செய்கிறேன் என்று பார் என்று கூறி வீடியோ காலிலேயே குழந்தைகளை கொடுமைப்படுத்தி, கத்தியை கழுத்தில் வைத்துள்ளார். இதனை பார்த்து பரிதவித்த ராதிகா வேறு வழி இன்றி மேலஉசேன்நகரம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராதிகா, குன்னம் காவல் நிலையத்தில புகார் கொடுத்துள்ளார், போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி