அரியலூர் மாவட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி
பட்டாயா கணக்காளர், இடைநிலை நிறுவன செயலாளர். இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டி தேர்வுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம் உணவு வசதிகள் தாட்கோ மூலம் வழங்கப்படும் இதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.