அரியலூர்: சார் பதிவாளரிடமிருந்து 5000 ரூபாய் பணம் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இரும்பிலிகுறிச்சி சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பொழுது சார்பதிவாளர் முகமது இக்பாலிடம் இருந்து கணக்கில் வராத 5000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.