விஷம் குடித்த வாலிபர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: *

73பார்த்தது
*வாங்கிய கடனை கட்டச் சொல்லி தனியார் நிதி நிறுவனம் டார்ச்சர்: *
*விஷம் குடித்த வாலிபர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: * *உடையார்பாளையம் போலீசார் விசாரணை: *


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் நடுவெளி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன்(33). டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற பெண்ணுடன் திருமணமாகி 1மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் அரியலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆண்டு ரூ 12 லட்சம் கடனாக பெற்று மாத தவணை கட்டி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தவணை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த வாரம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூலிக்க வந்த 2 நபர்கள் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மூன்று மாத தவணையை கேட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த 25 ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்துள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி