அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல்லிதோப்பு கிராமத்தில் உள்ள பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் முடிவற்ற நிலையில் மண்டல அபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம் உட்பட 21 வகையான திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.