*அரியலூரில் பள்ளி திறந்த முதல் நாளே காத்திருந்த அதிர்ச்சி: கதவு, ஜன்னல், மின்விசிறியை உடைத்து அட்டூழியம் செய்த குடிமகன்கள். *
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்டது தத்தனூர் குடிகாடு. இங்கு அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்றிரவு அத்துமீறி உள்ளே நுழைந்த குடிமகன்கள் சிலர் வகுப்பறை பூட்டை உடைத்து பள்ளியின் ஜன்னல், மின்விசிறி, பூட்டுகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.
மேலும், நோட்டுகளை கிழித்தெறிந்து வகுப்பறை முழுவதும் குப்பைகளாக்கி வைத்துள்ளனர். இன்று பள்ளித் திறப்பை முன்னிட்டு வகுப்பிற்கு வந்து ஆசிரியர்களும், மாணவர்களும் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.