ஜெயங்கொண்டம்: பாமக மாவட்ட செயலாளார் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்

66பார்த்தது
ஜெயங்கொண்டம் - பாட்டாளி மக்கள் கட்சி கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில் அன்புமணி ராமதாசால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராமதாஸ் அவர்களால் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி நியமிக்கப்பட்டு ரவி தலைமையில் பொதுக்குழு கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் போட்டி பொதுக்குழுவாக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் இன்று தனியார் மண்டபத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

திமுக தான் எதிர்க்கட்சி அதற்கு எதிராக 2026 ஆம் ஆண்டு பாமக வெல்லும். மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் எண்ணிக்கையை சேர்க்க வேண்டும் எனவும் தேர்தலுக்காக அனைவரும் தற்போது இருந்து பாடுபட வேண்டும் எனவும் பேசினார். இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி